பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரு நாளில் 733 பேர் பலி

தினமலர்  தினமலர்
பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரு நாளில் 733 பேர் பலி

பிரேசிலியா : பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து நேற்று ஒருநாளில் 20,286 பேர் பாதிக்கப்பட்டனர். 733 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையிலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. பிரேசிலில் நோய் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 20,286 பேர் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியன் ( 18,84,967) ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 733 பேர் நோய் தொற்றால் பலியாகியுள்ளனர். பிரேசிலில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72,833 ஆக உயர்ந்தது. பிரேசிலில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 12,13,512 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மூலக்கதை