ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை

காத்மாண்டு: ‘ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல’ என்று நேபாள பிரதமர் கே. பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்தை தெரிவித்திருப்பதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக நேபாளத்திற்கும், இந்தியாவுக்குமான உறவில் சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

இப்போது அந்த நிலைமை சீரடைந்து வரத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, கருத்துக்கள் காரணமாக நேபாள பிரதமர் கே. பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த விவகாரம், இருநாட்டு உறவை பலவீனப்படுத்தியிருந்தது.

மேலும், இந்திய தனியார் செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்பு செய்ய அந்தநாட்டு அரசு தடை விதித்தது. மத்திய அரசின் தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ‘ராமர் ஒரு நேபாளி; அவர் இந்தியர் அல்ல. உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது’ என்று பிரதமர் கே. பி. சர்மா ஒலி கூறியதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி புது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

இருநாடுகளின் உறவுகளில் ஏற்கனவே நீடிக்கும் சிக்கல், பிரதமர் சர்மா ஒலியின் இந்த பேச்சால் மேலும் வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.

.

மூலக்கதை