ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கார் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 11 பேர் பலி..பலர் படுகாயம்!

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கார் வெடிகுண்டு தாக்குதல்: பாதுகாப்புப் படையினர் 11 பேர் பலி..பலர் படுகாயம்!

அய்பாக்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் சமாங்கன் மாகாணத்தில் தலைநகரமான அய்பாக் நகரில் ஒரே கட்டடத்தில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அலுவலகமும் உளவுத்துறை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்தக் கட்டிடம் அருகே காரில் வந்தவர்கள், சுற்றுச்சுவர் மீது மோதி குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்தத் தாக்குதலில் உளவுத்துறை அலுவலக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் உட்பட 54 படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிப்பட்டுள்ளது. பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என, அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் நடந்தது. பதிலடித் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரும் கொல்லப்பட்டதாகவும் மாகாண செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு தாலிபான்களே காரணம் என ஆப்கன் அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.

மூலக்கதை