மக்கள் தொகையில் 2027ல் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்

தினமலர்  தினமலர்
மக்கள் தொகையில் 2027ல் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்

ஜெனிவா: இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐநா., கணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை, 1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது. உலக மக்கள் தொகை 5 பில்லியனை எட்டிய நாளான 1987 ஜூலை 11ம் தேதியை நினைவுக்கூறும் வகையில் தேதி தேர்வு செய்யப்பட்டது. அடுத்த 33 ஆண்டுகளில் அதாவது 2020ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளது.

இது 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் என ஐநா., கணித்துள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீத அளவை மட்டுமே கொண்டுள்ள இந்தியா தற்போதைய மக்கள் தொகையில் 18 சதவீதத்தை (139 கோடி) கொண்டுள்ளது. சீனா 19 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. இதே நிலை செல்லும்பட்சத்தில், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத்தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை