3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!

தினகரன்  தினகரன்
3 நாளில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது; 5,71,460 பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!!

புதுடெல்லி:  இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 553 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254லிருந்து 9,06,752ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174லிருந்து 23,727ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471லிருந்து 5,71,460 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 11 அன்று தொற்று எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்த நிலையில், 3 நாளில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798.   குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567. தற்போது 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:-அந்தமான் நிகோபார் தீவுகள் - 166ஆந்திர பிரதேசம் - 31103அருணாச்சல பிரதேசம் - 387அசாம் -16806பீகார் - 17959சண்டிகர் -588சத்தீஸ்கர் - 4217தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 495டெல்லி - 113740கோவா - 2583குஜராத் - 42722அரியானா - 21894இமாச்சல பிரதேசம் - 1243ஜம்மு - காஷ்மீர்- 10827ஜார்க்கண்ட் -3898கர்நாடகா - 41581கேரளா -8322லடாக் - 1093மத்திய பிரதேசம் - 18207மகாராஷ்டிரா - 260924மணிப்பூர் - 1626மேகாலயா -318மிசோரம் - 233நாகலாந்து - 845ஒடிசா -13737புதுச்சேரி - 1468பஞ்சாப் - 8178ராஜஸ்தான் - 24936சிக்கிம் - 192தமிழ்நாடு - 142798தெலுங்கானா - 36221திரிபுரா -2080உத்தரகாண்ட் - 3608உத்தர பிரதேசம் - 38130மேற்கு வங்காளம் - 31448மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-2179மொத்தம் - 9,06,752

மூலக்கதை