அப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020

தினமலர்  தினமலர்
அப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020

ஐதராபாத்: அம்பதி ராயுடு ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ வீரர் அம்பதி ராயுடு 34. இவர் 55 ஒருநாள் போட்டிகளில் 1,.694 ரன்கள் எடுத்துள்ளார். 2019 உலக  கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய  இவர்,  ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் இவர், இந்த ஆண்டு   களமிறங்க காத்திருந்தார்.

அம்பதி ராயுடுவின் மனைவி சென்னுபள்ளி வித்யா. கடந்த 2009ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது இந்த ஜோடிக்கு   பெண்குழந்தை பிறந்தது. தனது மனைவி, குழந்தை படத்தை ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். இவருக்கு  சென்னை அணி துணைக் கேப்டன் ரெய்னா வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘மகள் பிறந்ததற்கு  வாழ்த்துக்கள், ஒவ்வொரு தருணத்தையும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக  கொண்டாடுங்கள்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை