‘ஐ மிஸ் யூ’: ராகுல் உருக்கம் | ஜூலை 13, 2020

தினமலர்  தினமலர்
‘ஐ மிஸ் யூ’: ராகுல் உருக்கம் | ஜூலை 13, 2020

புதுடில்லி: இந்திய அணியின் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 28. பெங்களூருவை சேர்ந்த இவர், இதுவரை 36 டெஸ்ட் (2,006 ரன்), 32 ஒருநாள் (1,239), 42 சர்வதேச ‘டுவென்டி–20’ (1,461) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இவர், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போட்டிகள் எதுவும் இல்லாததால் வீட்டில் ஓய்வில் உள்ளார்.

எவ்வித போட்டியிலும் பங்கேற்க முடியாத ஏமாற்றத்தில் உள்ள ராகுல், தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் ‘பேட்’, ‘ஹெல்மட்’ உள்ளிட்ட தனது கிரிக்கெட் உபகரணங்களை ஏக்கத்துடன் பார்க்கும் இவர், ‘ஐ மிஸ் யூ’ என, தெரிவித்துள்ளார். இப்புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படம் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் ‘லைக்’ கொடுத்துள்ளனர்.

மூலக்கதை