ரஷ்யாவில் உச்சத்தை தொடும் கொரோனா

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் உச்சத்தை தொடும் கொரோனா

மாஸ்கோ : ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 6,615 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் பாதிப்பு உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளில் ரஷ்யா 4 வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் நோய் தொற்றுக்கு இன்று புதிதாக 6,615 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,27,162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றுக்கு 130 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்தது.


நேற்று ஒரு நாளில் 3,615 பேர் குணமடைந்தனர். இதுவரை நோய் தொற்றுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 501,061 ஆக உயர்ந்தது. ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோய் தொற்று பரிசோதனை அதிகரித்து வருகிறது.

மூலக்கதை