கேரளாவில் புதிதாக 435 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
கேரளாவில் புதிதாக 435 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆனது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 128 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 87 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் மற்றும் 206 பேர் மற்றவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என அறியப்பட்டது. கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 59 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 57 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 56 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 50 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 42 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 39 பேருக்கும், திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 19 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 16 பேருக்கும் கோட்டயம், இடுக்கி மாவட்டத்தில் 12 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 5 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

அங்கு சிகி்ச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,743 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 4,097 பேர் குணமடைந்தனர். கடந்த ஒரு நாளில் 13,478 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 1,81, 784 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பாதிப்பு தொடர்வதையடுத்து புதிதாக 30 கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 222 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இவ்வாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை