5.34 லட்சம் பேர் குணமடைந்தனர் கொரோனா தொற்று பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது

தினகரன்  தினகரன்
5.34 லட்சம் பேர் குணமடைந்தனர் கொரோனா தொற்று பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது. இதுவரை 5.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 28,637 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு 26,000க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, 551 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் எண்ணிக்கை 62.93 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூலக்கதை