பாக்.,கில் ஹிந்து கோவில் கட்ட உலேமா வாரியம் ஆதரவு

தினமலர்  தினமலர்
பாக்.,கில் ஹிந்து கோவில் கட்ட உலேமா வாரியம் ஆதரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹிந்து கோவில் கட்ட, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் உலேமா வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக கிருஷ்ணர் கோவில் கட்ட, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. இதற்கு, பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமாபாதில், கோவில் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறக் கோரியும், பாக்., நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, பாக்., நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில், பாக்.,கில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் உலேமா வாரியம், ஹிந்து கோவில் கட்ட ஆதரவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் மதத்தலைவர்களின் இந்த போக்கு சரியானதல்ல என கண்டனம் தெரிவித்துள்ள அந்த வாரியத்தின் தலைவர், ஹிந்து கோவில் கட்டுவது தொடர்பான சர்ச்சையையும் கண்டித்துள்ளார்.

மூலக்கதை