இந்திய வீரர்களுக்கு சலுகை: கங்குலி எதிர்பார்ப்பு | ஜூலை 12, 2020

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்களுக்கு சலுகை: கங்குலி எதிர்பார்ப்பு | ஜூலை 12, 2020

புதுடில்லி: ‘‘ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் குறைக்கப்படலாம்,’’ என, கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ‘டுவென்டி–20’ (அக். 11, 14, 17), நான்கு டெஸ்ட் (டிச. 3–7, 11–15, 26–30, 2021 ஜன. 3–7) மற்றும் மூன்று ஒருநாள் (2021, ஜன. 12, 15, 17) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ஐ.சி.சி., வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின் படி, வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து சென்ற விண்டீஸ் வீரர்களை இதனை கடைபிடித்தனர். எனவே இது, இந்திய வீரர்களுக்கும் பொருந்தும்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி கூறியது: ஆஸ்திரேலிய தொடர் உறுதியானது. அங்கு இந்திய வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், ஓட்டல் ரூமில் 2 வாரங்கள் தனிமையில் இருப்பதால் வீரர்களுக்கு ஏமாற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் கிரிக்கெட் விளையாடலாம். தனிமைப்படுத்திக் கொள்ளுவதில் இந்திய வீரர்களுக்கு சலுகை கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

மூலக்கதை