ரஷித் கான் திருமணம் எப்போது | ஜூலை 12, 2020

தினமலர்  தினமலர்
ரஷித் கான் திருமணம் எப்போது | ஜூலை 12, 2020

 காபூல்: ‘‘ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை வென்றால் தான் எனது திருமணம் நடக்கும்,’’ என ரஷித் கான் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ரஷித் கான் 21. நவீன கிரிக்கெட் உலகில் சிறந்த ‘ஆல் ரவுண்டர்’. ஐ.சி.சி.,  ‘டுவென்டி–20’ தரவரிசையில் ‘நம்பர்–1’ பவுலராக உள்ளார். 67 ஒருநாள், 48 ‘டுவென்டி–20’ல் 200க்கும் மேல் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் மூன்று போட்டியில் 5 விக்கெட் சாய்த்தார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத்  அணிக்காக விளையாடுகிறார். 

தனது திருமணம் குறித்து ரஷித் கான் கூறுகையில்,‘‘உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் ஆக  வேண்டும். பிறகு தான் நிச்சயதார்த்தம், திருமணம் செய்து கொள்வேன்,’’ என்றார். 

இது நடக்குமா

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணி ஆப்கானிஸ். கடந்த 2015, 2019 என இரு உலக கோப்பை தொடரில் தான் ஆப்கானிஸ்தான்  பங்கேற்றது. இதில் பங்கேற்ற 15 போட்டியில் 1ல் தான் வென்றது. 14ல் தோற்றது. இந்த அணி உலக கோப்பை வென்றால் தான்  திருமணம் என ரஷித் கான் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.

மூலக்கதை