சேட்டன் சவுகானுக்கு கொரோனா | ஜூலை 12, 2020

தினமலர்  தினமலர்
சேட்டன் சவுகானுக்கு கொரோனா | ஜூலை 12, 2020

லக்னோ: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் 72. கவாஸ்கருடன் இணைந்து துவக்கம் தந்தவர். உள்ளூர் அரங்கில்  மஹாராஷ்டிரா, டில்லி அணிக்காக ரன் மழை பொழிந்தவர். 40 டெஸ்ட் (2,084 ரன்), 7 ஒருநாள் (153 ரன்) போட்டிகளில் பங்கேற்றார்.  முன்னாள் பார்லிமென்ட் உறுப்பினர். தற்போது உ.பி., மாநில அமைச்சராக உள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதியானது. 

இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.  இதுகுறித்து இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘சேட்டன் சவுகான் விரைவில் குணமடைய வேண்டும்,’’  என தெரிவித்தார். இந்திய வீரர் ஆர்.பி.சிங் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘சேட்டன் சவுகானுக்கு கொரோனா என தெரியவந்தது.  விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை