செவ்வாய்க்கு செல்ல 'வெள்ளி' முக்கியம்

தினமலர்  தினமலர்
செவ்வாய்க்கு செல்ல வெள்ளி முக்கியம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை குடியேற்றும் திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில், வெள்ளி கிரகம் ழவியாக செல்வதை ஒரே வழி என வானியல் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உட்பட சில நாடுகள் ஈடுபட்டுள்ளன. 'ஸ்பேஸ்எக்ஸ்' போன்ற தனியார் நிறுவனங்களும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோள் 1950ம் ஆண்டிலிருந்து இருக்கிறது. இந்நிலையில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முதல் விண்கலத்தை 2030 ல் செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் குழு, 'இதற்கு முதலில் விண்கலத்தை 'வெள்ளி'கோளுக்க செலுத்த வேண்டும். அங்கு விண்கலத்தை நிறுத்தி பின், அங்கிருந்து செவ்வாய்க்கு பயணிக்க வேண்டும். வெள்ளி கோளின் புவி ஈர்ப்பு விசை விண்கலம் செல்வதற்கு உதவிகரமாக இருக்கும். இதுதான், செவ்வாயை அடைய ஒரே வழி. இதன் மூலம் நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். மேலும் பூமிக்கு அருகில் வெள்ளிகோள் இருப்பதால், விண்கலத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மீண்டும் விண்கலத்தை பூமிக்கு விரைவாக திருப்ப ஏதுவாக இருக்கும்' என நாசா விண்வெளி மையத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

6.75 கோடி

சூரியனில் இருந்து இரண்டாவதாக வெள்ளி கோள் உள்ளது. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 225 நாட்களும், தன்னைத்தானே சுற்றிவர 243 நாட்களும் ஆகிறது. சூரியன் - வெள்ளி இடையிலான தூரம் 10.89 கோடி கி.மீ., இது பார்ப்பதற்கு 'பிங்க்' நிறத்தில் இருக்கும். இது சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோள். இது 'ஈவ்னிங் ஸ்டார்' எனவும் அழைக்கப்படுகிறது. பூமியில் இருந்து 6.25 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது.

மூலக்கதை