அமைதியாக இருந்துவிட்டார்கள்; கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள் சீனாவுக்கு முன்பே தெரியும்...ஹாங்காங் பெண் விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அமைதியாக இருந்துவிட்டார்கள்; கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள் சீனாவுக்கு முன்பே தெரியும்...ஹாங்காங் பெண் விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்து சீன அரசுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தும் அதுபற்றிய உண்மைகளை மறைத்துவிட்டதாக அந்நாட்டின் வைராலஜி துறை பெண் விஞ்ஞானி லீ - மெங் யென் குற்றம்சாட்டியிருக்கிறார். கொரோனா  விவகாரத்தில் சீனா மீதான சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹாங்காங் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறை  விஞ்ஞானி லீ - மெங் யென் பரபரப்பு புகார்களை முன்வைத்துள்ளார். கொரோனா உண்மைகளை தெரிவித்தால் சீனா அரசாங்கத்தால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ள லீ - மெங் யென் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து இருக்கிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர்  அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது என்ற உண்மை கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியே தெரியவந்துள்ளதாக லீ - மெங் யென் கூறியுள்ளார். ஆனால் அதனை சீன அரசாங்கம்  ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தனது உயரதிகாரிகளாக இருந்து வரும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான லியோ பூன்-க்கு தெரிந்தும் அவர் அமைதி காத்ததாக பெண் விஞ்ஞானி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பற்றிய தமது ஆய்வில் கண்டுபிடித்ததை தனக்கு  மேலேயுள்ள விஞ்ஞானிகள் புறக்கணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளை சீனா மறைக்காமல் உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது பற்றி  தாம் சீனாவில் இருந்து பேசியிருந்தால் மாயமாக்கப்பட்டிருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை