சாத்தான்குளம் கொலை குறித்து முழுமையான விசாரணை தேவை: ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலியுறுத்தல்!!!

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் கொலை குறித்து முழுமையான விசாரணை தேவை: ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலியுறுத்தல்!!!

வாஷிங்டன்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை குறித்து முழுமையாக விசாரணை நடத்தவேண்டுமென்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலிவுறுத்தியுள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய  நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டுமென்பதற்காக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுவரை விசாரணை நடைபெற்ற நிலையில், 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாணையானது  தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் முழுமையான தீர்வு கிடைக்கவேண்டுமென ஐ. நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலிவுறுத்தியுள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கு அமெரிக்காவில் கருப்பின ஜார்ஜ் கொலையுடன் ஒப்பிட்டு, கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமென்று ஐ.நா பொதுச் செயலாளர்  ஆன்டனியோ வலியுறுத்தி இருக்கிறார். ஐ.நா பொதுச் செயலாளர் சார்பில் அவரது உதவியாளர் ஸ்டீபன் புஜாரிக் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் இரட்டைக்கொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் புஜாரிக், ஐ.நா கொள்கைபடி இதுபோன்ற கொலைகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டுமென்று ஐ.நா பொதுச் செயலாளர்  ஆன்டனியோ குட்ரஸ் விரும்புவதாக, அவர் தெரிவித்தார். இதேபோல தெற்காசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் இயக்குநர் மீனாட்சி கங்குலி, அம்னீஸ்ட்டி இன்டெர்னாஷ்னல் இந்தியா நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் ஆகியோர்  சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மூலக்கதை