இந்திய டாக்டருக்கு கவுரவம் | ஜூலை 11, 2020

தினமலர்  தினமலர்
இந்திய டாக்டருக்கு கவுரவம் | ஜூலை 11, 2020

சவுத்தாம்ப்டன்: கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களது பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதன்படி  கேப்டன் பென் ஸ்டோக்சின் பயிற்சி ஜெர்சியில் இந்திய வம்சாவளி டாக்டர் விகாஸ் குமார் பெயர் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் டார்லிங்டன் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) அறக்கட்டளை மருத்துவமனையில் பணியாற்றும் விகாஸ் கூறுகையில்,‘‘நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். மருத்துவக் கல்லுாரி அணிக்காக விளையாடினேன். என் பெயர் பொறித்த ஜெர்சியை ஸ்டோக்ஸ் அணிந்திருந்ததை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அங்கீகாரம் இந்தியாவில் உள்ள என் மருத்துவ நண்பர்கள் உட்பட அனைத்து மருத்துவ சமூகத்திற்கும் உரியது. கொரோனா பிரிவில் பணிபுரிவது கடினமானது. மருத்துவ ஊழியர்கள் நிறைய தியாகம் செய்கின்றனர், " என்றார்.

மூலக்கதை