கொரோனா மையமாகும் ஈடன் கார்டன் | ஜூலை 11, 2020

தினமலர்  தினமலர்
கொரோனா மையமாகும் ஈடன் கார்டன் | ஜூலை 11, 2020

 

கோல்கட்டா: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட போலீசிற்கான தனிமைப்படுத்துதல் மையமாக கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானம்  மாறுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தில் 27,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 550  போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2 பேர் பலியாகினர். மருத்துவமனைகளில் அதிக நெருக்கடி காணப்படுகிறது.  இதையடுத்து, மொத்தம் 80,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட கோல்கட்டா, ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கொரோனா  பாதித்த போலீசிற்கான தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்படுகிறது. 

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் அவிேஷக் டால்மியா கூறுகையில்,‘‘ இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்  அரசிற்கு கைகொடுப்பது  எங்களது கடமை. மைதானத்தில் இருக்கைள் அமைந்துள்ள பகுதி மட்டும் போலீசிற்காக தனிமைப்படுத்துதல்  மையமாக மாற்றப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருசில பகுதிகள்  முற்றிலும் தனிமைப்படுத்தப்படும்,’’ என்றார்.

மூலக்கதை