கவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020

தினமலர்  தினமலர்
கவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020

மும்பை: இந்திய ஜாம்பவான் கவாஸ்கருக்கு, ரகானே, லட்சுமண், ரெய்னா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். மும்பையை சேர்ந்த இவர், கடந்த 1971ல் விண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். மொத்தம் 125 டெஸ்ட் (10,122 ரன்கள், 34 சதம், 45 அரைசதம்), 108 ஒருநாள் (3092 ரன்கள், ஒரு சதம், 27 அரைசதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைத்த இவர், ஜூலை 10ல் தனது 71வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

அஜின்கியா ரகானே: பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவாஸ்கர் சார். நிறைய மகிழ்ச்சி கிடைக்கட்டும்.

 

ரெய்னா: ஜாம்பவானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நிறைய சாதனைகள் படைத்த நீங்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நீங்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகிறேன்.

 

இதேபோல சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), முகமது கைப், லட்சுமண் உள்ளிட்டோரும் கவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை