ஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020

சவுத்தாம்ப்டன்: ‘‘முதல் டெஸ்டில் சேர்க்கப்படாதது ஏமாற்றமும், கோபமாகவும் உள்ளது,’’ என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்தார்.

இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது.முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படவில்லை. அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் ஓய்வு தரப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியது: பொதுவாக நான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன் அல்ல. ஆனால் கடந்த சில நாட்கள் எனக்கு கடினமாக இருப்பது போல தோன்றுகிறது. நான்  ஏமாற்றம் அடைந்திருப்பதாக சொல்வது தவறு. ஏனெனில் உங்கள் அலைபேசி கீழே விழுந்து ‘ஸ்கிரீன்’ உடைந்து விட்டால் ஏமாற்றம் இருக்கத் தான் செய்யும்.

நான் விரக்தியடைகிறேன், கோபப்படுகிறேன், ஏனெனில் இப்போது எடுக்கப்பட்ட முடிவை புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. கடந்த சில ஆண்டுகளாக முடிந்தவரை சிறப்பாக பந்து வீசினேன். இது எனக்கான இடம் என்று நினைக்கிறேன். 

இவ்வாறு ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.

 

மூலக்கதை