‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020

தினமலர்  தினமலர்
‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020

 புதுடில்லி: ‘‘நெருக்கடியை சிறப்பாக கையாள முடியாதது தான் இந்திய பெண்கள் அணியினால் உலக கோப்பை பைனல்களில் சாதிக்க  முடியவில்லை,’’ என தேர்வுக்குழுத் தலைவர்  ேஹமலதா கலா தெரிவித்தார். 

இந்திய பெண்கள் அணி 2017 ஒருநாள் உலக கோப்பை பைனலில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பை இழந்தது. இந்த ஆண்டு  ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து, வெறுங்கையுடன் திரும்பியது. 2018  ‘டுவென்டி–20’ உலக  கோப்பை தொடர் அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதுகுறித்து பதவி விலகவுள்ள இந்திய பெண்கள் அணி தேர்வுக்குழுத்  தலைவர்  ேஹம்லதா கலா கூறியது:

இந்திய அணி வீராங்கனைகள் மிகப்பெரிய தொடர்களில் விளையாட தயாராக இருக்க வேண்டும். அனுபவம், இளமை கலந்த  அணியாக திகழ்ந்த போதும், இதில் சொதப்பி விடுகின்றனர். முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்புவது, நெருக்கடியான  நேரங்களில் சிறப்பாக செயல்படாதது போன்ற காரணங்களால் இந்திய அணி முக்கிய போட்டிகளில் தோற்க நேரிடுகிறது. 

2017  உலக கோப்பை பைனலில் 229 ரன்களை (எதிர்–இங்கிலாந்து) ‘சேஸ்’ செய்த போது 191/3 என வலுவாக இருந்து, கடைசியில்  தோல்வியடைந்தோம். நெருக்கடியான நேரங்களை சிறப்பான முறையில் கையாளும் திறமை இன்னும் இந்திய அணிக்கு வரவில்லை.  இதைச் சரியாக செய்து விட்டால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை தொடர்ந்து வீழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை