முடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020

தினமலர்  தினமலர்
முடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020

புதுடில்லி: ‘‘உலக கோப்பை அரையிறுதியில் தோல்வியை தவிர்க்க முடிந்தவரை போராடினோம்,’’  என ஜடேஜா தெரிவித்தார். 

இங்கிலாந்து மண்ணில் நடந்த 2019 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. மான்செஸ்டரில் நடந்த  இப்போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இது நடந்து நேற்றுடன் ஒரு ஆண்டு  முடிந்தது. 

இதுகுறித்து இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா கூறுகையில்,‘‘ அரையிறுதியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என  கடைசி நிமிடம் வரை போராடினோம். ஆனால் கடைசியில் தோல்வியடைந்து விட்டோம். எங்களது மோசமான நாட்களில் ஒன்றாக  இதுவும் அமைந்து விட்டது,’’ என்றார். 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர், பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடரில் பங்கேற்ற மற்ற  அணிகளை விட இந்திய அணி வலுவானது என்பதில் சந்தேகம் இல்லை. லீக் சுற்றில் ஒன்றில் மட்டும் தான் தோற்றது. இதனால்  இந்தியா மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்தது. கடைசியில்  இதுவே நெருக்கடியாகிப் போனது,’’ என்றார். 

மூலக்கதை