ஆலோசனை! நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற

தினமலர்  தினமலர்
ஆலோசனை! நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற

கம்மாபுரம் : நீர் மேலாண்மை திட்டத்தில் கம்மாபுரம் வட்டார விவசாயிகள் சேர, வேளாண்மை அதிகாரி, ஆலோசனை வழங்கியுள்ளார்.

கம்மாபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் (பொறுப்பு) சுரேஷ், விடுத்துள்ள செய்திக்குறிப்பு:துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு, ஆழ்துளை கிணறு, டீசல் பம்பு செட், மின் மோட்டார், கூடுதலாக பாசன குழாய்கள், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வழிவகை உள்ளது.இத்திட்டத்தில் சேர, பதிவு செய்த விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, மின் மோட்டாருக்கு, 15 ஆயிரம் ரூபாயும், டீசல் பம்பு செட்10 ஆயிரம் ரூபாயும், பி.வி.சி., பாசன குழாய்கள் ரூ.10 ஆயிரம், கான்கிரீட், செங்கல் கட்டுமானத்தில்அமைக்கப்பட்ட தரைநிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம், ரூ.40 ஆயிரத்தில் 50 சதவீதம் பின் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், போட்டோ, சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல், அசல் ரசீது உட்பட அனைத்து ஆவணங்களையும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை