துவக்கம்! சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி

தினமலர்  தினமலர்
துவக்கம்! சுகாதார சீர்கேட்டை தடுக்க ரூ.1.5 கோடி செலவில் ... வாய்க்கால் துார்வாரும் பணி

புதுச்சேரி : உழந்தை ஏரி வடிகால் வாய்க்காலை ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் துார் வாரும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

உழந்தை ஏரி வடிகால் வாய்க்காலில் குப்பைகள் குவிந்து விடுவதால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பக்கத்தில் உள்ள நகர்களிலும் கழிவு நீர் புகுந்து விடுகிறது. இதையடுத்து, பொதுப்பணித் துறை மூலமாக வாய்க்காலை துார் வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மழை நீரும், கழிவு நீரும் தடையில்லாமல் வடிந்து கடலுக்கு செல்லும் வகையில், மரப்பாலத்தில் இருந்து உப்பங்குழி வழியாக அப்துல் கலாம் நகர் பைப் பாலம் வரை ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் துார் வாரப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர் ரங்கராஜ், நேரு நகர், சப்தகிரி நகர் நல வாழ்வு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூலக்கதை