அமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை

வாஷிங்டன்: உத்தர பிரதேச மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர், ஜிதேந்திர ஹரீஷ் பெலானி, 37. அமெரிக்காவில் வசித்து வந்த இவர், தடை செய்யப்பட்ட மருந்து கடத்தலுக்காக, ஐரோப்பிய நாடான செக் குடியரசில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். ஒரு ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில், தடை செய்யப்பட்ட பல மருந்துகளை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததை, ஜிதேந்திரா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மூலக்கதை