ட்வீட் கார்னர்...கவாஸ்கர் 71

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்...கவாஸ்கர் 71

இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்திய அணிக்காக 125 டெஸ்ட் போட்டியில் விளையாடிய கவாஸ்கர் 10122 ரன் (அதிகம் 236*, சராசரி 51.12, சதம் 34, அரை சதம் 45) விளாசி உள்ளார். மேலும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன் (அதிகம் 103*, சராசரி 35.13, சதம் 1, அரை சதம் 27) எடுத்துள்ளார். இது தவிர, ரஞ்சி கோப்பை உள்ளிட்ட முதல் தர கிரிக்கெட்டில் 348 போட்டியில் 25,484 ரன் (அதிகம் 340, சராசரி 51.46, சதம் 81, அரை சதம் 105) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதம் அடிக்கும் சாதனையை 3 முறை நிகழ்த்திய முதல் பேட்ஸ்மேன், டெஸ்டில் 10,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. சச்சின், கோஹ்லி உட்பட கிரிக்கெட் பிரபலங்கள், பிசிசிஐ, ஐசிசி மற்றும் ரசிகர்கள் கவாஸ்கருக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை