ஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: வெடித்து சிதறிய சீன ராக்கெட்?

தினகரன்  தினகரன்
ஏவும் முயற்சி தோல்வி என்று அறிவிப்பு: வெடித்து சிதறிய சீன ராக்கெட்?

பெய்ஜிங்: குறைவான செலவில் திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய குவைசோ-11 என்ற ராக்கெட்டை சீனா தயாரித்தது. இதை 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவப்படவில்லை. இந்நிலையில், 3 ஆண்டுகள் கால தாமதத்திற்கு பின்னர் நேற்று ராக்கெட் ஏவப்படும் என்று சீனா அறிவித்திருந்தது. இந்த ராக்கெட் மூலம் 6 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஜிகுவான் ராக்கெட் ஏவுதளத்தில் குவைசோ-11 ராக்கெட்டை நேற்று மதியம் விண்ணில் ஏவப்பட்டது.ஆனால், ஏவுதளத்தில் இருந்து விண்ணைநோக்கி சிறிது தூரம் சென்ற ராக்கெட் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்துவிட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ராக்கெட் விண்ணில் வைத்து வெடித்து சிதறியதா? அல்லது தரையில் விழுந்து தோல்வியடைந்ததா? என்ற தகவலை சீன அரசு தெரிவிக்கவில்லை.

மூலக்கதை