சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

தினமலர்  தினமலர்
சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது

பீஜிங்: சீனா ஏவிய அதிநவீன ராக்கெட்டான 'குய்சோ-11' ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியது. இதுகுறித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறைவான செலவில், திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து செல்லும் திறனுடைய 'குய்சோ-11' ராக்கெட்டுடன், 6 செயற்கைக்கோள்களையும் ஏவ திட்டமிட்டிருந்தது. 3 ஆண்டுகள் முயற்சித்த நிலையில், இன்று ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் கிளம்பிய ஒரு நிமிடத்தில், நடுவானில் வெடித்து சிதறியது. இதற்கான காரணம் குறித்து, ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


சீனாவின் முந்தைய வெற்றிகரமான ராக்கெட்டான 'குய்சோ-1ஏ' ராக்கெட்டின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், 112.2 மீட்டர் விட்டம், 700 டன் எடை கொண்டது.

மூலக்கதை