பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அதிர்ஷ்டம்: ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்

தினமலர்  தினமலர்
பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அதிர்ஷ்டம்: ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. பிலிப்பைன்சிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 133 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் நிறுவனங்கள் ஆபர் மழையை அறிவித்து உள்ளன.

அந்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தில் சாண்டா ஃபீஇ சொகுசுகாரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.38 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.இந்த ர காரை வாங்கினால் 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ரெய்னா செடான் கார் இலவசமாக கிடைக்கும் . இந்த வகை கார் இல்லாவிட்டால் ஆபரை பொறுத்து ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள அசண்ட் கார் இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.


கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ரூ.1,500 கொடுத்து புதிய காரை ஓட்டிச் செல்லலாம் என அறிவித்துள்ளது. மீதி தொகையை தவணையில் கட்டிக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

பிஎம் டபிள்யூ கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் , இந்த வகை கார்களின் சிலகுறிப்பிட்ட மாடல்களின் விலையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ளன.

மூலக்கதை