பாக்., விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

தினமலர்  தினமலர்
பாக்., விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

வாஷிங்டன்: பாக்., விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மே மாதத்தில் பாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்சின் ஜெட் விமானம் கராச்சியில் விபத்துக்குள்ளானது. இதில் 97 பேர் பலியானார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் விமானிகளாக பணியாற்றி வந்தவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் உரிய கல்வித்தகுதி இல்லாத காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் பாக்., நாட்டினரை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்களை இயக்க பாக்., நாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், பாக்., விமானிகளின் தகுதி குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை கவலை தெரிவித்ததையடுத்து முன் அளித்த சிறப்பு அனுமதியை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொண்டது. இதே போல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பாக்., விமானங்களுக்கு 6 மாதங்கள் தடை விதித்துள்ளது.

மூலக்கதை