சீனாவில் கடும் வெள்ளம்: 140 பேர் பலி

தினமலர்  தினமலர்
சீனாவில் கடும் வெள்ளம்: 140 பேர் பலி

பீஜிங்: சீனாவின் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் பாயும் யாங்சி நதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி 140 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


அந்நாட்டின் அன்குய் மற்றும் ஜியாங்சி மாகாணங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. அங்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இந்நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நதாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வெள்ளத்தால் ரூ 66 ஆயிரம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை