நியூசி., அணிக்கு புதிய கேப்டன் | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
நியூசி., அணிக்கு புதிய கேப்டன் | ஜூலை 09, 2020

வெலிங்டன்: நியூசிலாந்து பெண்கள் அணிக்கு ‘ஆல்-ரவுண்டர்’ சோபி டிவைன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக அமி சாட்டர்த்வைட் இருந்தார். சமீபத்தில் இவர், மகப்பேறு விடுப்பில் சென்றதால், ‘ஆல்-ரவுண்டர்’ சோபி டிவைன், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில் முழுநேரக் கேப்டனாக சோபி டிவைன் அறிவிக்கப்பட்டுள்ளார். விடுப்பு முடிந்து அணிக்கு திரும்பும் போது, சாட்டர்த்வைட் துணைக் கேப்டனாக செயல்படுவார்.

இதுவரை 105 ஒருநாள், 91 சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டிகளில் விளையாடி உள்ள சோபி டிவைன் 30, மொத்தம் 4,954 ரன்கள், 158 விக்கெட் சாய்த்துள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அடுத்து நடக்கும் போட்டிகளுக்கு சோபி டிவைன் முழுநேரக் கேப்டனாக செயல்படுவார். துணைக் கேப்டனாக சாட்டர்த்வைட் இருப்பார்,’’ என, தெரிவித்திருந்தது.

சோபி டிவைன் கூறுகையில், ‘‘முழுநேரக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது மிகவும் சவாலானது. இருப்பினும் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என்று நம்புகிறேன்,’’ என்றார்.

சாட்டர்த்வைட் கூறுகையில், ‘‘விரைவில் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளேன். அப்போது சோபி டிவைனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அணியின் வெற்றிக்கு போராடுவேன்,’’ என்றார்.

மூலக்கதை