தோனி வழியில் ரோகித்: சொல்கிறார் கரண் சர்மா | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
தோனி வழியில் ரோகித்: சொல்கிறார் கரண் சர்மா | ஜூலை 09, 2020

புதுடில்லி: ‘‘தோனியை போலவே ரோகித் சர்மாவும் ‘பீல்டிங்’ அமைக்க பவுலர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்,’’ என, கரண் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ‘சுழல்’ வீரர் கரண் சர்மா 32. கடந்த 2014ல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான இவர், 2017, ஐ.பி.எல்., தொடரில் ரோகித் சர்மா வழிநடத்திய மும்பை அணிக்காக பங்கேற்றார்.

இருவரின் தலைமை குறித்து கரண் சர்மா கூறியது:

தோனி, ரோகித் சர்மாவின் தலைமை பண்பில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தோனியிடம் இருந்து ரோகித் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன். அமைதியாக காணப்படும் இருவரும், ‘பீல்டிங்’ அமைக்க பவுலர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பர். தேவைப்படும் பட்சத்தில் மட்டும் ‘பீல்டர்களை’ நிறுத்த பவுலர்களுக்கு ஆலோசனை வழங்குவர். போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை ‘கூலாக’ இருந்து சமாளிப்பர்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ‘டுவென்டி-20’ போட்டியில் அறிமுகமான போது, முதல் பந்தை வீசிய எனக்கு ‘‘ஜோ ரூட் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ விளையாடுவார் எனவே ‘கூக்லி’ பந்து வீசுமாறு,’’ தோனி ஆலோசனை வழங்கினார். இதேபோல ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போதும் நிறைய ஆலோசனை வழங்கினார். தோனியை விட சிறந்த கருத்துகளை தெரிவிக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை நான் பார்த்ததில்லை.

இவ்வாறு கரண் சர்மா கூறினார்.

மூலக்கதை