ஐ.பி.எல்., தொடர்: நியூசி., மறுப்பு | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடர்: நியூசி., மறுப்பு | ஜூலை 09, 2020

வெலிங்டன்: ‘ஐ.பி.எல்., தொடரை நடத்த விருப்பம் தெரிவிக்கவில்லை,’ என, நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள (அக். 18 – நவ. 15) ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடர் இந்தியா அல்லது அன்னிய மண்ணில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) நாடுகளை தொடர்ந்து நியூசிலாந்தும் 13வது ஐ.பி.எல்., தொடரை நடத்த விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதனை மறுத்த நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு செய்தி தொடர்பாளர் ரிச்சர்டு பூக் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., தொடரை நடத்த நாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்காக, இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) அனுகவும் இல்லை. இது ஊகத்தின் அடிப்படையில் வெளியான தவறான செய்தி,’’ என்றார்.

மூலக்கதை