உள்ளூர் தொடர் எப்போது: கங்குலி விளக்கம் | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
உள்ளூர் தொடர் எப்போது: கங்குலி விளக்கம் | ஜூலை 09, 2020

புதுடில்லி: ‛‛பயணம் பாதுகாப்பாக இருக்கும் போது மட்டுமே உள்ளூர் தொடர்கள் நடத்தப்படும்,’’ என, கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டன. ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இரானி கோப்பை ரத்தானது. இந்நிலையில் அடுத்த மாதம் இறுதியில் விஜய் ஹசாரே டிராபி, அதன்பின் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி மற்றும் சையது முஷ்தாக் அலி டிராபி போன்ற உள்ளூர் தொடர்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‛‛இந்தியா மிகப் பெரிய நாடு. உள்ளூர் போட்டிகளுக்காக ஒவ்வொரு அணிகளும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க வேண்டும். எனவே பயணம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும். போட்டி நடத்துவதை விட, வீரர்களின் உடல் நலன், பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். உள்ளூர் போட்டி இளம் வீரர்களுக்கு மிகவும் அவசியம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின், இதனை நடத்துவது சிறந்தது,’’ என்றார்.

மூலக்கதை