கங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல் | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
கங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல் புயல் | ஜூலை 09, 2020

கோல்கட்டா: கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளார் நக்மா.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. தற்போது பி.சி.சி.ஐ., தலைவராக உள்ளார். நேற்று முன் தினம் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் நடிகை நக்மா 45, வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2000ல் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் ரொம்ப  பிரபலம். இதனை வதந்தி என கங்குலி கூறியதால், காதல் பேச்சு அடங்கியது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் நக்மா தெரிவித்த வாழ்த்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாழ்த்தை டோனாவுக்கு(கங்குலி மனைவி) பகிரவும் என குறும்புக்கார ரசிகர் ஒருவர் பதிவிட்டார். உடனே அவரை ‘பிளாக்’ செய்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார் நக்மா. தொடர்ந்து ‘டுவிட்டரில்’ பல ‘மீம்ஸ்கள்’வெளியிட்டு கங்குலி–நக்மாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

மூலக்கதை