சவாலான பகுதி...மக்கள் நெருக்கும் மிகுந்த மும்பை தாராவி...இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை..!!

தினகரன்  தினகரன்
சவாலான பகுதி...மக்கள் நெருக்கும் மிகுந்த மும்பை தாராவி...இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை..!!

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2347-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 329 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் அமைந்துள்ளது தாராவி. இது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, அது தாராவியையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தாராவியில், முதல் பாசிட்டிவ் கேஸ் உறுதியானது. இது மும்பை மாநகராட்சிக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக முதலில் கூறப்படுவது சமூக இடைவெளிதான். ஆனால், தாராவியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். மேலும், அங்குள்ள மக்களுக்கு முறையான கழிவறை வசதிகள் இல்லாததும், பெரும் சவாலான விஷயமாகப் பார்க்கப்பட்டது. தாராவியில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், அங்கு எளிதில் வைரஸ் பரவிவிடும் என மும்பை மாநகராட்சி அஞ்சியது. இந்த நிலையில் தற்போது தாராவியில் கொரோனா சற்று குறைந்து வருகிறது. மேலும் தாராவி பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை