கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

தினகரன்  தினகரன்
கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என முதல்வர் பினராயி விஜயன் பேட்டி அளித்துள்ளார். விசாரணைக்கான அனைத்து உதவி, ஒத்துழைப்பை கேரள மாநில அரசு வழங்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.\r 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.\r இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை