ஐபிஎல் கார்னர்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் கார்னர்

* பெருகும் வாய்ப்புகள் கொரோனா பீதி காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுக்குள் களம் காண வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பரில் டி20 உலக கோப்பை போட்டி நடக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றனர். அதேபோல் செப்டம்பரில் நடக்க இருந்த டி20 ஆசிய கோப்பை போட்டியும் ரத்தாகி விட்டது. அதனால் ஐபிஎல் தொடர் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.* ஐபிஎல் முக்கியமானது‘‘ஐபிஎல் போட்டி இல்லாத ஒரு ஆண்டை நினைத்து பார்க்க முடியவில்லை. அதுவும் 2008ம் ஆண்டுக்கு பிறகு  ஐபிஎல் தொடர் காலண்டரில் முக்கிய அங்கமாக மாறி விட்டது. வீரர்களின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் ஐபிஎல் மிக முக்கியமானது’’ என்று தென் ஆப்ரிகாவின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.* நியூசிலாந்து மறுப்புஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை நியூசிலாந்தில் நடத்த நியூசிலாந்து கிரிக்கெட்(என்இசட்சி)முன் வந்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. ஆனால் அதனை என்இசட்சி செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் மறுத்துள்ளார். இது குறித்து ரிச்சர்ட், ‘தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள் நியூசிலாந்தில் நடந்த நாங்கள் முன்வந்திருப்பதாக சொல்பவை எல்லாம் வெறும் யூகங்கள்தான். அப்படி ஐபிஎல் போட்டிகளை நடத்த இதுவரை நாங்கள் விருப்பமும் தெரிவிக்கவில்லை..... ஆர்வமும் காட்டவில்லை...’ என்று கூறியுள்ளார்.* அமீரகத்தில் ஆட்டமா?ஐபிஎல் பேட்டிகள் 2009ம் ஆண்டு தென் ஆப்ரிகாவில் நடந்தன. தொடர்ந்து 2014ல் சில போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்(யுஏஈ) நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த முறையும் அமீரகத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. * இலங்கை இல்லையாஅதே நேரத்தில் இந்தியாவுக்கும், போட்டி நடைபெறும் நாட்டுக்கும் இடையில் நேர வித்தியாசம் அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்ற யோசனையும் இருக்கிறது. அதனால் ஐபிஎல் வாய்ப்பு பட்டியலில் இலங்கையும் இருக்கிறதாம்.

மூலக்கதை