ஆசிய கோப்பை ஒத்திவைப்பு | ஜூலை 09, 2020

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை ஒத்திவைப்பு | ஜூலை 09, 2020

புதுடில்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்., மாதம் பாகிஸ்தானில் நடக்க இருந்தது. பின் பாதுகாப்பு காரணமாக இலங்கையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இத்தொடர் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்,‘கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனால் ஆசிய கோப்பை தொடரை அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது,’’ என தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல்., எப்படி

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை (அக்., 18–நவ. 15) ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆசிய கோப்பையும் தள்ளிப் போனதால், வரும் செப்.,–நவ.,ல் 13வது ஐ.பி.எல்., நடத்த அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை