இந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை

தினமலர்  தினமலர்
இந்திய டி.வி. சானல்களுக்கு நேபாளம் தடை

காத்மண்டு: இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டது, இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது, நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது காரணம் இந்தியா தான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது போன்வற்றால் இந்திய நேபாள நாட்டிற்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது.



இந்நிலையில் நேபாளம் அரசுக்கு எதிராக இந்திய டி.வி. சானல்கள்தவறான பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை