கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 65 பேர் உயிரிழந்தனர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளது. இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,765-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை