டோர் டெலிவரி செய்யும் நாய்; சமூக வலைதளங்களில் வைரல்

தினமலர்  தினமலர்
டோர் டெலிவரி செய்யும் நாய்; சமூக வலைதளங்களில் வைரல்

கொலம்பியா: நாய்கள் காலகாலமாக மனிதர்களின் நண்பர்களாகவே இருந்து வருகின்றன. காட்டு நரியின் பரிணாம வளர்ச்சியே நாய் இனம். இவை மனிதர்களின் நம்பிக்கை மிக்க விலங்குகளாகவும் சொல்வதைச் செய்யும் வேலை ஆள் போலவும் நடந்துகொள்வது அனைவருக்கும் தெரியும். நாய்களின் மூளையில் அவற்றின் நன்றி உணர்ச்சிக்கான பிரத்தியேக சுரப்பி ஒன்று உள்ளது.

இதனாலேயே நாய்கள் தனது எஜமானர் மீது மிகவும் பற்று கொண்டு இருக்கின்றன. தற்போது கொலம்பியாவில் ஓர் நன்றி உணர்ச்சிமிக்க நாயின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எட்டு வயதான எராஸ் என்ற ஆண் நாய் கொலம்பியாவின் மெண்டலின் பகுதியில் உள்ளது. லாப்ரடர் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் ராஜ விஸ்வாசத்திற்கு மிகவும் பெயர் போனது. இந்த நாயின் சிறப்பம்சம் என்னவென்றால், கொரோனா வைரஸ் தாக்கத்தில்போது சமூக விலகலைக் கடைபிடித்து தனது எஜமானரின் கடையில் உள்ள சாமான்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்கிறது.

எராஸ் எஜமானர் மரியா நாட்விடாட் பொடேடோ. இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். தங்களின் கடைக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் பெயரை மனப்பாடம் செய்து வைத்துள்ளது எராஸ். இதனால் இவர்கள் வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் சாமான்களை டோர் டெலிவரி செய்கிறது. எராஸுக்கு வாடிக்கையாளர்களின் விலாசம் தெரியாது.

ஆனால் வாடிக்கையாளரது பெயரை தெளிவாக அதற்குப் புரியும்படி கூறிவிட்டால் அவரது வீட்டிற்குத் தனி ஆளாகச் சென்று டோர் டெலிவரி செய்வது இதன் சிறப்பம்சம். மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளிவிட்டு நடந்து செல்கிறது. இதனுடன் செல்பி எடுத்துக்கொள்ள பலர் ஆவலாக உள்ளனர்.

எராஸ் பொருட்களை கேரி பேக் கொண்டு வாயில் கவ்விவந்து டோர் டெலிவரி செய்துவிடும். அதற்குண்டான தொகையை வாடிக்கையாளர்கள் இணையம் மூலம் செலுத்தி விடுவர். தற்போது ஆறு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்கின்றது எராஸ். மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய எராஸை அதன் எஜமானர் பழக்கப்படுத்தி உள்ளார்.

மூலக்கதை