இந்தியாவின் 90 சதவீத கொரோனா பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
இந்தியாவின் 90 சதவீத கொரோனா பாதிப்புகள் 8 மாநிலங்களில்தான் உள்ளன: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் 8 மாநிலங்களில் தான் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக 49 மாவட்டங்களில் தான் 80 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே 86 சதவீத கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன. மொத்த உயிரிழப்புகளில் 80 சதவீதம் 32 மாவட்டங்களில் இருக்கின்றன.\r இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளை முன்னரே அறிந்து இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் பாதிப்புகள் குறைவாக இருக்கிறது. நாட்டில் 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் கொரோனா உள்ளது. 10 லட்சம் பேரில் 15 பேர்தான் உயிரிழக்கின்றனர். இது சர்வதேச சராசரியான 10 லட்சம் பேருக்கு 1,453 பேர் பாதிப்பு என்பதைக் காட்டிலும் மிகக் குறைவானதாகும்.\r மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 90 சதவீத பாதிப்புகள் இருக்கின்றன. மொத்தம் 21.3 கோடி N95 மாஸ்க்குகள், 1.2 கோடி தனிநபர் பாதுகாப்பு உடைகள், 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 7.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 21,129 ஆக உள்ளது.

மூலக்கதை