சிபிஎஸ்இ 12, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வரும் 11,13ல் தேதிகளில் வெளியாகும் என்ற தகவல் தவறானது - சிபிஎஸ்இ நிர்வாகம்

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 12, 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவு வரும் 11,13ல் தேதிகளில் வெளியாகும் என்ற தகவல் தவறானது  சிபிஎஸ்இ நிர்வாகம்

டெல்லி: நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதி வெளியாகும் என்று வெளியான அறிவிப்பில் உண்மையில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை உச்சநீதிமன்றத்தில்  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.இதனையடுத்து சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்ற தகவல்களை தற்போது சி.பி.எஸ்.இ மறுத்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை