பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அச்சமில்லாமல் எதிர்கொள்வோம் : ப.சிதம்பரம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அச்சமில்லாமல் எதிர்கொள்வோம் : ப.சிதம்பரம்

சென்னை : அச்சமின்றி வாழ எங்களுக்கு இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அதன்படி பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்வோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். அவ்வப்போது ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசுக்கு கேள்விகளையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்.அந்த வரிசையில், ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது, பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். மோடி அரசு எப்படி எல்லாம் எங்களைத் துன்புறுத்தினாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள அதுவே உறுதுணையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை