ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

தினகரன்  தினகரன்
ஜம்மு  காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

புதுடெல்லி:  ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த 6 பாலங்களும் எல்லை சாலைகள் அமைப்பால் சுமார் 43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.பாதுகாப்பு அமைச்சர், அக்னூர் செக்டரில் நான்கு பாலங்களையும் ஜம்மு-ராஜ்புரா பகுதியில் இரண்டு பாலங்களையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார்.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக பாலங்களை திறந்து வைத்தார். அவருடன் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அதேசமயம் பாலங்கள் உள்ள பகுதிகளில் நடைபெற்ற விழாவில், அந்தந்த பகுதி ராணுவ அதிகாரிகள் பங்கேற்று, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். கடந்த மாதம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்திராகண்டில், எல்லை சாலைகள் அமைப்பு மேற்கொள்ளும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மத்திய அரசு கூடுதலாக 1,91 கோடி ரூபாயை வழங்கியிருந்தது.ஜம்மு-காஷ்மீரிலிருந்து 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து, அங்கு பலவிதமான வளர்ச்சிப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகள் மற்றும் நலத் திட்டங்களின் பயன்களையும் இனி ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள மக்கள் பெற வழி பிறந்துள்ளது. இதனிடையே BRO இயக்குநர் ஜெனரல் /லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், \'மொத்தத்தில், நாங்கள் 17 பாலங்களை கட்டமைத்து வருகிறோம். அவற்றில் 6 பாலங்கள் முடிக்கப்பட்டுள்ளன, எஞ்சிய 5 பாலங்கள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும், மற்றவை மார்ச் 2021க்குள் நிறைவடையும். ஆகவே, அனைத்து பாலங்களும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்படும்,\' என்றார்.

மூலக்கதை