டெல்லியில் மத்திய நிதியமைச்சக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!!!

தினகரன்  தினகரன்
டெல்லியில் மத்திய நிதியமைச்சக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!!!

டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் குடியரசு மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகைக்கு அருகே 4 பெரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்களை சவுத் ப்ளாக் என்றும் நார்த் ப்ளாக் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளனர். அதில் நார்த் ப்ளாக் பகுதியில்தான் நிதியமைச்சகம் அமைந்துள்ளது. இந்நிலையில், நிதியமைச்சகம் அமைந்துள்ள பகுதியில் 2வது தளத்தில் உள்ள மேற்கூரையானது திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு பணிபுரிந்தவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, விபத்து ஏற்பட்ட பகுதியில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக விவரங்களை சேகரித்து வைக்கும் இடமாகவும் இதுவரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட விபத்தால், அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி நாசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உயிர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கட்டிக்கமானது மிக பழமையானதாக இருப்பதால் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து ஏற்பட்டதன் காரணமாக விரைவில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை இந்த கட்டிடங்களில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை