பிரேசிலில் போல்சனாரோவின் ஆட்சி கலைய வாய்ப்புள்ளதா?

தினமலர்  தினமலர்
பிரேசிலில் போல்சனாரோவின் ஆட்சி கலைய வாய்ப்புள்ளதா?

பிரேசிலியா: பேஸ்புக் நிறுவனம் கடந்த புதனன்று வெளியிட்ட தனது அறிக்கையில் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனரோவிடம் வேலை செய்யும் ஊழியர்கள் சிலரது பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாகத் தெரிவித்தது. பேஸ்புக் வரம்புகளுக்கு உட்பட்ட போலி செய்திகளைப் பரப்பிய இவர்களது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் அதிகரித்துவரும் இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகம் அல்லது ஓர் இனத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும்படி பேஸ்புக்கில் பதிவிடுகிற கணக்கு நீக்கப்படும். இதற்கு உதாரணமாக சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் ஓர் பதிவை நீக்காமல் விட்டது பெரும் சர்ச்சையாகியது. இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் விழித்துக்கொண்டது. ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும்கூட பேஸ்புக்கில் இது போன்ற வரம்பு மீறிய பதிவுகளை இட்டால் அவர்களது பதிவுகள் நீக்கப்படும் என கட்டாயமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே பிரேசில் அதிபர் போல்சனரோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தால் நான் என்ன செய்ய முடியும் என அவர் கைவிரித்து விட்டார் என அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனைத்தொடர்ந்து தற்போது பேஸ்புக்கில் இந்த அதிரடி நடவடிக்கை அவரது கட்சிக்கு அவப்பெயரை மேலும் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

போல்சனாரோவின் அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். சட்டத்துறை ஊடகத்துறை, உள்ளிட்டவற்றை முடக்குவது பொருளாதார செய்திகளை தவறான முறையில் பரப்புவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். 2018ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் விரைவில் அவரது ஆட்சி கலைக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை